நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக பியார் பிரேமா காதல் பட இயக்குனரான இளன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் , அதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான திரைப்படம் பியார் பிரேமா காதல் . இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் தயாரித்திருந்தது . ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரட்டாக உள்ளது .மேலும் இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.அந்த வெற்றியை கொண்டாடும் விதமாக யுவன் சங்கர் ராஜா இயக்குனர் இளனுக்கு கார் பரிசாக அளித்தது குறிப்பிடத்தக்கது.அதனைதொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு ஆகிய படங்களில் நடித்த ஹரிஷ் கல்யாண் தற்போது தெலுங்கில் சூப்பர் ஹிட்டான பெல்லி சூப்பலு படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக மீண்டும் பியார் பிரேமா காதல் பட கூட்டணியுடன் மீண்டும் இணைய உள்ளார் . இளன் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .அதனை யுவன் சங்கர் ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த திரைப்படம் மூன்று கால கட்டங்களை அதாவது ஹீரோவின் குழந்தை பருவம்,இளமை உள்ளிட்ட 3 காலங்களை மையப்படுத்தி உருவாக உள்ளதாகவும் ,இது மியூசிகல் ஃபிலிம் என்றும் ,எனவே பியார் பிரேமா காதல் படத்தை விட இந்த படத்தில் அதிக பாடல்கள் இருக்கும் என்றும் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் , மும்பை, சென்னை,ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஷூட்டிங்கை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…