எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன் என்று ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிட்டார். இதில் 1700 வாக்குகள் வித்தியாசத்தில் கமல்ஹாசன் தோல்வியடைந்தார்.
இதனை தொடர்ந்து கமல்ஹாசன் ட்வீட்டர் பக்கத்தில் “மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம். வாக்களித்த மக்களுக்கும், தேர்தல் களத்தில் தோள் கொடுத்த மநீம உறுப்பினர்களுக்கும், கூட்டணிக் கட்சியினருக்கும் மனமார்ந்த நன்றிகள். “சீரமைப்போம் தமிழகத்தை’ என்பது ஒரு தேர்தலுக்கான கோஷம் அல்ல. அது மக்கள் நீதி மய்யத்தின் கனவு. மண், மொழி, மக்கள் காக்க தொடர்ந்து களத்தில் நிற்போம்” என்று ட்வீட் செய்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது கமல் ஹாசன் மகள் மற்றும் நடிகையான ஸ்ருதிஹாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசன் கையில் டார்ச் லைட்டை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு “எப்பொழுதுமே எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…