தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
ராஷி கன்னா தமிழ் சினிமாவில் கடந்தாண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படத்தில் இவர் நடிகர் அதர்வா முரளிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதனையடுத்து தமிழில் அயோக்யா, சங்கதமிழன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின்னர் பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். கடந்த மாதம் இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் வேல்ட் ஃபேமஸ் லவ்வர். இந்த படத்தை கிராந்தி மாதவ் இயக்கினார். மேலும், இவருடன் விஜய் தேவரகொண்டா, கேத்ரின் தெரசா , ஐஸ்வர்யா ராஜேஷ், இசபெல் லைட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் பெறவில்லை.
தற்போது ஊரடங்கு காரணமாக பல பிரபலங்கள் ரசிகர்களிடம் உரையாடல் நடத்தி நேரத்தை செலவிடட்டு வருகின்றனர். அந்த வகையில் நேற்றைய தினம் டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி உள்ளார்.அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு பிடித்த தனுஷ் படம் எது கேட்கையில், அசுரன் மற்றும் வடசென்னை ஆகிய இரண்டு தனுஷ் படங்கள் பிடிக்கும் என்று பதிலளித்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் உங்களுக்கு பிடித்த இயக்குநர்கள் யார் என்று கேட்டதற்கு தமிழ் சினிமாவில் திறமையான பல இயக்குநர்கள் உள்ளனர். அதில் வெற்றிமாறன் சார், ஷங்கர் சார், மணிரத்னம் சார் மற்றும் அட்லி உள்ளிட்டவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார்.
இஸ்ரேல் : ஈரானுடனான மோதல் காரணமாக தனது மகனின் திருமணம் இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டதாகவும், இது தனது குடும்பத்தினர் செலுத்திய…
சென்னை : தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மீது மேல் நடவடிக்கை எடுக்கஅமலாக்கத்துறைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக்…
சென்னை : சென்னை விமான நிலையத்தில் இன்று (ஜூன் 20) டெல்லி, மும்பை, மற்றும் தூத்துக்குடி செல்லும் 8 விமானங்கள்…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் இன்று (ஜூன் 20) உலகம் முழுவதும் 'உலக அகதிகள் தினம்' என அனுசரிக்கப்படுகிறது. போர்,…
வாஷிங்டன் : சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிற்கு இறுதி நேரத்தில் அழைக்கப்பட்ட மோடி, டிரம்ப் உடன் பேச்சு வார்த்தை நடத்துவார்…
சென்னை : இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ள 'ஜன நாயகன்' திரைபடம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜய்யின்…