சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
2 டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அறிமுக இயக்குனரான ஜே. ஜே. பிரட்ரிக் இயக்கும் திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். மேலும் பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பார்த்திபன், தியாகராஜன், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத் திரத்தில் நடிக்கின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.பல்வேறு பிரச்சனைகளை கடந்து தற்போது இந்த படம் நாளை ஓடிடியில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தற்போது உலகளவில் ஓடிடியில் வெளியிடுவதற்கு முன்பு பல பிரபலங்களுக்காக முன்னோட்டம் ஒன்று நடைபெற்றது. அதன் மூலம் பல பிரபலங்கள் பொன்மகள் வந்தாள் படத்தை பார்த்து பாராட்டி வரும் நிலையில், 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வெற்றியடைந்த திரைப்படம் சில்லுக்கருப்பட்டி. இந்த படத்தின் இயக்குனர் பொன்மகள் வந்தாள் படத்தினை பார்த்து விட்டு கூறியதாவது, நான் பொன்மகள் வந்தாள் படத்தின் ஆன்லைன் பிரீமியர் ஷோவை பார்த்தேன் என்றும், நீதிமன்றத்தில் நடந்த அந்த காட்சியால் உணர்ச்சிவசப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
வெண்பாவை நடிக்கும் ஜோ மாம் தன்னை ஜோதிகா மற்றும் அவரது மகளின் இடத்தில் நிறுத்தி ‘தி ஜோதிகா கேஸை’ எதிர்த்து போராடுவது தன்னை பிரமிக்க வைத்ததாகவும், இது ஒரு முக்கியமான படம் என்றும், மேலும் பாதிக்கப்பட்டவர்களையும், உயிர் பிழைத்தவர்களையும் பேச ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் சிறந்த நோக்கம் மற்றும் அருமையான தயாரித்தலுக்கு பிரட்ரிக் மற்றும் குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…