மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்தோடு தொடங்குகிறது.
இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவின் முக்கிய திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவிழாவின் 5ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருளி,பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அறுபத்துமூவர் விழாவில் விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர் கற்பகாம்பாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வந்து அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து வீதி உலா வருகின்றனர்.இதைத் தொடர்ந்து வரும்7ந்தேதி திருக்கல்யாண காட்சியோடு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…