நடிகர் யாஷுடன் சிம்பு மற்றும் கார்த்தி இருவரும் சேர்ந்து புதிய திரைப்படத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கே. ஜி. எஃப் சாப்டர் 1 என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் தான் கன்னட நடிகரான யாஷ். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்தது. யாஷ் தற்போது கே. ஜி. எஃப் சாப்டர் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தையும் பிரசாந்த் நீல் இயக்குகிறார். இந்தப் படத்தை அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் தற்போது யாஷ் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது தமிழில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோரை வைத்து இயக்குநர் நார்த்தன் இயக்கத்தில் வெளியான Mufti படத்தின் ரீமேக் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த படத்தில் யாஷிற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகை தமன்னா ஏற்கனவே கன்னடத்தில் ஜாகுவார் என்ற படத்தில் ஒரு பாடலுக்கும், கே.ஜி.எஃப் படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடியது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…