கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டிரைலர் இன்று முன்னணி நடிகர்களான தனுஷ், மோகன்லால் மற்றும் நானி அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களால் வெளியிடப்பட்டது. ஒரு அம்மாவின் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் பெரிய அளவில் ரீச்சானது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலரை இன்று மதியம் 12 மணிக்கு பிரபல முன்னணி நடிகர்கள் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பெங்குயின் படத்தின் தமிழ் டிரைலர் தனுஷ் அவர்களாலும், மலையாள டிரைலரை மோகன்லால் அவர்களாலும், தெலுங்கு டிரைலரை நானி அவர்களாலும் வெளியிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…
டெல்லி : மத்திய விவசாயிகள் பாசனத்திற்காக பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக்க முடிவு செய்துள்ளது. இந்தத் திட்டம் நீர்…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறை அருகே தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு ஒன்று இருக்கிறது. அந்த குடியிருப்பு…
சென்னை : வரும் 1-ம் தேதியன்று ஏ.சி. மற்றும் ஏசி அல்லாத ரயில் டிக்கெட்டுக்கான கட்டணம் 1 கிலோ மீட்டருக்கு…