பலரின் உயிரை காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் செய்து வந்ததால் நடிகை தமன்னா மற்றும் பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில காலங்களாகவே ஆன்லைன் மூலமாக ரம்மி விளையாடி அதன் மூலம் பணத்தை இழந்து கடனுக்குள் தள்ளப்படுவதால், மன அழுத்தத்தில் பலர் தற்கொலை செய்து உயிர் இழக்கின்றனர். இந்நிலையில் இந்த விளையாட்டை தடை செய்யுமாறு பல்வேறு சமூக ஆர்வலர்களும், பிரபலஙகளும் தொடர்ந்து கூறி வருகின்றனர். இறப்பவர்கள் ஒருபுறமிருக்க இந்த ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை விளம்பரப்படுத்த கூடிய பிரபலங்களும் ஒருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். பிறரின் உயிரை காவு வாங்க கூடிய இந்த விளையாட்டு தடை செய்யப்பட வேண்டும் என்று பலர் கேட்டு இருந்த நிலையில், திரை உலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் இந்த விளையாட்டைத் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக நடிகர்களில் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கேரளா மலையாள நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோர் விளம்பரப்படுத்துகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர். எனவே இவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என அண்மையில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் கேரளாவை சேர்ந்த ஒரு இளைஞர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்சம் ரூபாயில் இழந்து விட்டதாக தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை அடுத்து கேரள நீதிமன்றத்தில் ஒருவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் கிரிக்கெட் வீரர் மற்றும் மற்ற பிரபலங்கள் உட்பட தமன்னா மற்றும் காமெடி நடிகர் அஜு வர்கீஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…