நம்முடைய நிகழ்காலம் அனைத்தும் நாம் சரியாக செய்தும், ஏதோ ஒன்று அந்த செயலை தடுத்து நீங்கள் நினைத்த காரியத்தை அடைய முடியாமல் ஆகிவிடுகிறது. அதற்கு நம்மில் பலர் முன் ஜென்மத்தில் நாம் என்ன தவறு செய்தோமோ என்று எண்ண வைத்து விடுகிறது. அப்படி நம் முன் ஜென்மத்தில் செய்த பாவங்களை கணக்கிட்டு இந்த ஜென்மத்தில் அதற்கான பலன் அல்லது தண்டனை, சிறு குறைகள் நம்மில் பலருக்கும் நிகந்து இருக்கும்.
அதனை நிவர்த்தி செய்ய பல வழிகள் உள்ளன. அதாவது எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும் அதனை தீர்த்து வைக்கும் வல்லமை நமது குல தெய்வத்திற்கு உண்டு. அந்த குலதெய்வ வழிபாட்டை முறையாக கடைபிடிக்க வேண்டும். நம்முடைய குல தெய்வம் எந்த தெய்வம், நம் முன்னோர்கள் எந்த குல தெய்வத்தை வழங்கினார்கள் என கண்டறிந்து குலதெய்வ வழிபாடு செய்ய வேண்டும்.
அடுத்ததாக நம் முன்னோர்கள் வழிபாடு. முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து விடவேண்டும். அவர்களுக்காக அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். எள், தண்ணீர் வைத்து முன்னோர்களின் ஆசியை பெற்று கொள்ள வேண்டும். பசுவிற்கு வெல்லம், வாழைப்பழம், அகத்தி கீரை போன்றவற்றை கொடுக்கலாம். காகத்திற்கு தினமும் மதிய உணவு படைக்க வேண்டும். இது நமது முன் ஜென்ம வினையை குறைக்க கூடிய பரிகாரங்களில் ஒன்று.
ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று நமது இஷ்ட தெய்வத்தை மனதார வேண்டிக்கொண்டு பிரார்த்திக்க வேண்டும். பின்னர், வீட்டிற்கு வந்து பூஜையறையில் நமது குலதெய்வத்தை மனதார நினைத்து வேண்டிக் கொண்டு அரச மர இலைகளை மூன்று மூன்றாக பிரித்து அதன்மீது உப்பை வைத்து பின்னர் உதிரி பூக்களை அதன் போட்டுக்கொள்ளுங்கள். அப்படியே அதன் மீது அகல் விளக்குகளை வைத்து 9 அகல் விளக்குகள் வைத்து வழிபடுங்கள். இதனை 9 அமாவாசைகள் தொடர்ந்து செய்வதன் மூலம் நம்முடைய பாவ வினைகளில் இருந்து நமக்கு மோட்சம் கிட்டும்.
நாம் கோவிலுக்கு செல்லும் போது சண்டிகேஸ்வரரை கண்டிப்பாக வணங்க வேண்டும். நம்முடைய முன்ஜென்ம பாவங்கள் எல்லாம் தீர்த்து வைக்கும் ஆற்றல் கொண்டவர் சண்டிகேஸ்வரர். அவரை வேண்டி கொண்டு அன்னதானம் செய்யலாம். அது நமது முன்ஜென்ம பாவங்களை போக்க வல்லது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…