நியூசிலாந்து நாட்டில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தற்பொழுது உலகளவில் மொத்தமாக 2,02,54,685 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7,38,930 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் 1,31,18,618 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
இதனிடையே நியூசிலாந்து நாட்டில்,கடந்த 100 நாட்களில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.எனவே உலக சுகாதார அமைப்பும் நியூசிலாந்தை பாராட்டியது. இதனால் நியூசிலாந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் அங்கு புதிதாக ஒரு குடும்பத்தைசேர்ந்த 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இவர்களுக்கு கொரோனா எப்படி பரவியது என்பது குறித்து கண்டறியப்படவில்லை. இது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறுகையில், நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…