டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த நியூசிலாந்து!

இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் மோத உள்ளது. இப்போட்டி பர்மிங்காம்மில் உள்ள எட்க்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்க இருந்தது.
ஆனால் மைதானத்தில் இருந்த ஈரப்பதம் காரணமாக 1 மணி நேரத்திற்கு பிறகு டாஸ் போடப்பட்டது.இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
நியூசிலாந்து அணி வீரர்கள்:
மார்ட்டின் குப்டில், கொலின் மன்ரோ, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ரோஸ் டெய்லர், டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் நீஷாம், கொலின் டி கிராண்ட்ஹோம், மிட்செல் சாண்ட்னர், மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் இடம் பிடித்தனர்.
பாகிஸ்தான் அணி வீரர்கள்:
இமாம்-உல்-ஹக், ஃபக்கர் ஜமான், பாபர் ஆசாம், முகமது ஹபீஸ், ஹரிஸ் சோஹைல், சர்பராஸ் அகமது (கேப்டன் & விக்கெட் கீப்பர் ), இமாத் வாசிம், சதாப் கான், வஹாப் ரியாஸ், முகமது அமீர், ஷாஹீன் அப்ரிடி ஆகியோர் இடம் பிடித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025