மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதில் போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1.07 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் சென்னை -பெங்களூரு இடையே எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் 2023ம் ஆண்டிற்குள் செயல்படுத்தப்படும் என பல அறிவிப்புகளை வெளியிட்டார்.அதில் அனைவராலும் பெரிதும் உற்று நோக்கப்பட்ட அறிவிப்பாக மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது குறித்த அறிவிப்பு தான் இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார்.
உலகில் தொழில் நுட்பங்கள் பெருகி கொண்டிருக்கும் இந்த வேளையிலும் கூட மனித கழிவுகளை அகற்றுவதில் இன்றளவும் மனிதர்கள் தான் ஈடுபட்டு வருகின்றனர் என்பது வேதனை தருகிறது.இதற்காக வெறும் குரல் அளவில் மட்டுமே குரல் கொடுத்து வந்த நிலையில் இது குறித்த தெளிவான நடவடிக்கை இது வரையிலும் எடுக்கப்படவில்லை என்பதே நிதர்சமான உண்மை எத்தனை உயிர்கள் இதற்கு பலியாகி உள்ளனர் அத்துனைப்பேரும் அன்றாட வாழ்க்கை நடத்தும் சாமானி ஜனங்கள் என்பதை இங்கே அனைவரும் நினைக்க தவறுகின்றனர்.
இந்நிலையில் தான் பட்ஜெட்டில் இது குறித்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மனித கழிவுகளை மனிதனே அகற்றுவதை தடுக்க திட்டம் வகுக்கப்பட்டு அதற்காக புதிய தொழில் நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் இதன் மூலமாக மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது தடுக்கப்படும் என்று தெரிவித்தார்.இதுவும் பெயரளவில் அறிப்பாக இருக்காமல் செயல் அளவில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…