நடிகை நிதி அகர்வாலிற்கு கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும், உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என்று அறிக்கை வெளியிட்டு நிதி அகர்வால் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகை நிதி அகர்வால் கடந்த பொங்கல் தினத்தன்று சிம்பு நடிப்பில் வெளியான ஈஸ்வரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பூமி திரைப்படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் நடித்த இரண்டு திரைப்படங்களும் வெற்றியை கொடுத்த நிலையில், அடுத்தாக நடிகர் பவன் கல்யாணிற்கு ஜோடியாக ஒரு புதிய திரைப்படத்திலும், இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாக உள்ள ஒரு புதிய திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த ரசிகர்கள் நடிகை நிதி அகர்வாலிற்கு சிலை வைத்து பால் அபிஷேகம் செய்தனர். அதற்கான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.மேலும் இவருக்கு கோவில் கட்ட திட்டமிட்டிருப்பதாகவும் சிலை வடிவமைப்பு பணிகள் நிறைந்திருப்பதால் அதற்காக பாலபிஷேகம் செய்யப்பட்டு ள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்த செய்தியை அறிந்த நிதி அகர்வால் இது குறித்து கூறுகையில் “நான் கண்டிப்பாக இதை எதிர்பார்க்கவே இல்லை. மிகச்சிறந்த காதலர் தின பரிசு. எனது ரசிகர்களை நான் மிகவும் நேசிக்கிறேன் இது போன்ற நிகழ்வுகளால் நான் இன்னும் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று உற்சாகம் ஏற்பட்டுள்ளது என கூறியிருந்தார்.
அதனை தொடர்ந்து தனக்கு கோவிலில் கட்ட திட்டமிட்ட ரசிகர்களுக்கு ஒரு கோரிக்கை ஒன்றை விடுத்தது தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், என்மீது எனது ரசிகர்கள் பொழியும் உண்மையான மற்றும் நிபந்தனையற்ற அன்பை கண்டு மிகவும் உற்சாகம் அடைந்துள்ளேன். எப்போதும் அவர்கள் எனக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் நிறைய தொண்டு செய்து வருகிறார்கள் என்பது பாராட்டக்கூடிய விஷயம். அதே சமயம் எனக்காக கட்டப்படும் கோவில் ஏழைகளுக்கான தங்குமிடமாகவும் உணவளிக்கும் உணவகமாகவும், படிக்கும் கூடமாகவும் இருந்தால் எனக்கு மகிழ்ச்சி என இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை இடத்தில் கடந்த மே 12-ஆம் தேதி பாமகவின் பிரமாண்ட மாநாடு "சித்திரை முழு…
மணிப்பூர் :சந்தேல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆயுத கும்பலைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…