Nixen dance [File Image]
பிக் பாஸ் சீசன் 7 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்கள் சினிமா பிரபலங்கள் போல வேடங்கள் அணிந்துகொண்டு அவர்களை போலவே நடனம் ஆடவேண்டும். அவர்கள் போட்டிருக்கும் கதாபாத்திரம் ஏற்றது போல பாடல் ஒளிபரப்பு செய்யப்பட்டவுடன் வேகமாக சென்று வீட்டிற்கு நடுவில் கொடுக்கப்பட்டிருக்கும் மேடையில் நடனம் ஆட வேண்டும்.
அந்த வகையில் நிக்சனுக்கு காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற தனுஷின் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டு இருந்தது. எனவே, அவர் அந்த கதாபாத்திரத்தில் தனுஷ் எப்படி ஆடினாரோ அதே போலவே ஆடவேண்டும். எனவே, காதல் கொண்டேன் படத்தில் இடம்பெற்ற தொட்டு தொட்டு பாடல் வீட்டிற்குள் ஒளிபரப்பு செய்யப்பட்டது.
தப்பை ஒத்துக் கொள்கிறேன் ஆனா வருத்தப்பட மாட்டேன்! பிக் பாஸ் ஜோவிகா எழுதிய கடிதம்!
உடனடியாக அனைவரும் கவரும் விதமாக நிக்சன் அங்கிருந்த தண்ணியை எடுத்துக்கொண்டு தலையில் ஊற்றிக்கொண்டு நடனம் ஆடினார். ஏனென்றால், படத்தில் தனுஷ் மழையில் நினைந்த படி நடனம் ஆடுவார். எனவே, அந்த ஒரு உணர்வு எல்லாருக்கும் இருக்கவேண்டும் என்பதற்காக நிக்சன் தன்னுடைய தலையில் தண்ணீர் ஊற்றிகொண்டு தொட்டு தொட்டு பாடலுக்கு நடனம் ஆடினார்.
தனுஷ் அந்த படத்தில் பாடலில் எப்படி நடனம் ஆடி இருப்பாரோ அதே போலே நிக்சன் நடனம் ஆடினார் என்றே சொல்லலாம். இவர் ஆடிய நடனத்தை பார்த்து பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் ஆச்சரியத்துடன் அமர்ந்து பார்த்தார்கள். அவர்களை போலவே நிக்சன் நடனம் ஆடிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் “தனுஷுக்கு டஃப் கொடுக்கும் நிக்சன்” என்று கூறி வருகிறார்கள். அவர் நடனம் ஆடிய அந்த வீடியோவும் வைரலாகி வருகிறது.
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…