பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் அந்நாட்டின் இராணுவத்தை அவதூறு செய்ததாக கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீசார் நபி மேமன் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோது, பாகிஸ்தான் இராணுவத்தை அவமதிக்க முயன்றதாக குற்றம் சாட்டிய ஒருவரின் புகாரின் பேரில் பிலால் ஃபாரூகி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.மேலும் “பிலாலின் தொலைபேசியை போலீசார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாவேத் கான் என்பவர் புகார் அளித்துள்ளதாகவும்,பாகிஸ்தான் இராணுவம் எதிராகவும் பிலால் ஃபாரூகி பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தான் இராணுவத்தை “அவதூறு” செய்ததாகவும், அத்தகைய சமூக வலைத்தள பதிவுகள், “தீங்கு விளைவிக்கும் வகையில் பயன்படுத்தப்படலாம் என்றும் கான் குற்றம் சாட்டினார்.
பத்திரிகையாளர் கைது தொடர்பாக கராச்சி பத்திரிகையாளர்கள் சங்கம்வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிலாலை கைது செய்வது சுதந்திரமான மற்றும் சுயாதீனமான குரல்களைப் பறிப்பதற்கான மோசமான மற்றும் ஒருங்கிணைந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…
சென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, ககன்யான் திட்டத்தின் கீழ் 2027 மார்ச் மாதத்தில் முதல் மனிதர்களை…
சென்னை :தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி…
டெல்லி : ஜூலை 28-ஆம் தேதி பீகார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்ற…
நெல்லை : ஜூலை 27-ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில், பட்டியலினத்தைச் சேர்ந்த மென்பொறியாளரான கவின் (வயது 27)…