மும்பையில் இவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ரன்பீர் கபூர்-ஆலியாபட் திருமணம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வரும் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் இருவரும் நீண்ட காலங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இவர்கள் தற்போது தங்களது நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தார் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரக்கூடிய இவர்கள் தங்கள் குடியிருப்பை வண்ண விளக்குகளால் அலங்கரித்து பாலிவுட் பிரபலங்கள் சிலரையும் அழைத்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு கரீனா கபூர், சைப் அலி கான், நீத்து கபூர், கரன் ஜோகர் உள்ளிட்ட சில பிரபலங்களும் வந்துள்ளனர். இவரது ரசிகர்கள் இவர்களுக்கு திருமண வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் ஆலியாபட், இந்த திருமணம் குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “இன்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட, வீட்டில்… எங்களுக்கு பிடித்த இடத்தில் – எங்கள் உறவின் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் கழித்த பால்கனியில் – நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
மேலும் இன்னும் பல நினைவுகளை உருவாக்க எங்களால் காத்திருக்க முடியாது…காதல், சிரிப்பு, மௌனம், திரைப்பட இரவுகள், வேடிக்கையான சண்டைகள், மது மகிழ்வுகள் என நினைவுகள் நிறைந்துள்ளது.
எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் அனைத்து அன்புக்கும் ஒளிமிக்க வாழ்த்துக்கும் நன்றி. இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது.
அன்புடன்
ரன்பீர் மற்றும் ஆலியா ✨♥️”
கம்சாட்கா : ரஷ்யாவின் கம்சாட்கா தீபகற்பத்திற்கு அருகே இன்று (ஜூலை 30, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில்…
சென்னை : பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சி தலைவர் ,விஜய் தலைமையில் வெற்றிபேரணியில்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்…
திருவாரூர் : அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, மடப்புரம் அஜித்குமார் (26) கொலை…
வாஷிங்டன் : ஜூலை 30, 2025: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20…
திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…