மேஷம் : எடுக்கும் காரியங்களில் செயல்களில் வெற்றி கிட்டும் நாள். இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு செயலை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. திருமணப் பேச்சுக்கள் முடிவாகும்.
ரிஷபம் : புதிய முயற்சிக்கு வெற்றி கிட்டும் நாள். நல்ல மனம் கொண்டவர்களின் தொடர்பால் நன்மை காண்பீர்கள். கடல் கடந்து செல்லும் வாய்ப்புகள் கை கூடுவதற்கான அறிகுறி தோன்றுகிறது.
மிதுனம் : நட்பு மூலம் நன்மை கிடைக்கும் நாள். திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடியே நடைபெறும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். பணவரவு திருப்தி தரும்.
கடகம் : இறை வழிபாடு மூலம் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டிய நாள். தொழிலில் மறைமுகப் போட்டிகள் ஏற்படும். எடுத்த காரியங்களை நிறைவேற்றுவீர்கள்.மனக்குழப்பம் அகன்று புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள்.கோபம் குறைந்து மகிழ்ச்சியோடு பேசுவீர்கள்.
சிம்மம் : எதிர்பாராத வகையில் பணம் கைக்கு வந்து சேரும் நாள். வளர்ச்சி கூடும். உங்களை துச்சமென நினைத்து உதாசீனப்படுத்தியவர்களுக்கு உங்கள் உதவி தேவைப்படும். பழைய பிரச் சினைகளை தீர்க்க தீவிரமாக செயல்படுவீர்கள். வீடு வாங்கும் முயற்சி வெற்றி பெறும்.
கன்னி : வேண்டாம் என்று விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாழ்க்கைத் துணை வழியே இருந்த பிரச்சினை அகன்று அன்பு அதிகரிக்கும்.கல்யாணக் கனவுகள் நனவாகும்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
துலாம் : எதிரிகள் உங்களை விட்டு விலகி செல்லும் நாள்.கொடுக்கல்- வாங்கல் பலன் கிடைக்கும்.உத்யோகத்தில் பணிமாற்றம் குறித்த சிந்தனை மேலோங்கும். நீண்ட நாள் பிணியிலிருந்து விடுபடுவீகள்.கடன்களை அடைக்க யுக்திகளைக் கையாளுவீர்கள்.
விருச்சிகம் : நன்மைகள் பன்மடங்கு நடைபெறும் நாள். வருமானம் எதிர்பார்த்ததைக் காட்டிலும் இருமடங்காகலாம்.நட்பு வட்டாரம் விரிவடையும்.புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டப்படியே நடைபெறும்.
தனுசு : இனிய செய்திகள் ஒன்று இல்லம் தேடி வருகின்ற நாள். கொடுக்கல்- வாங்கல்கள் மனதிருப்தி தரும். வாகனத்தை மாற்ற முனைப்பு காட்டுவீர்கள். பெற்றோர் வழியில் பிரியம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடியே வரவு கைக்கு வந்து சேரும்.
மகரம் : தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள்.தடைகள் அகலும். உறவினர்கள் தக்கசமயத்தில் உதவிகரம் நீட்டுவர். தலைமைப் பொறுப்புகள் உங்களை தேடி வரும். பூர்வீக சொத்துப்பிரச்சினை அகன்று சுமூகமாக முடிவடையும்.
கும்பம் : கொடுத்த வாக்கை காப்பாற்றி மகிழ்வீர்கள்.எதிர்பார்த்த லாபமானது இல்லம் தேடி வரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். திருமணப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். பூமி வாங்க தற்போது யோகம் ஏற்பட்டுள்ளது.
மீனம் : இன்று மேற்கொள்ளும் பயணத்தால் பலன் கிடைக்கும் நாள். பக்குவமாகப் பேசி காரியங்களைச் சாதித்து விடுவீர்கள். தொழில் முன்னேற்றத்தில் பங்குதார்களின் ஒத்துழைப்பு கிட்டும். ஆரோக்யம் சீராகும்.மனமகிழ்ச்சி ஏற்படும்.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…