வலிமை பட தயாரிப்பாளரான போனி கபூர் தயாரிக்கும் அடுத்த படத்தினை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆர்ஜே-வாக இருந்து அதன் பின் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆர்ஜே பாலாஜி.எல்கேஜி படத்தில் ஹீரோவாக நடித்த பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி இயக்கவும் செய்திருந்தார்.வசூல் ரீதியாக படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது ‘பதாய் ஹோ’ என்ற இந்தி திரைப்படத்தினை ரீமேக்கை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுஷ்மான் குரானா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு முழுக்க காமெடி படமாக உருவாகி ரூ.220 கோடி வரை வசூல் செய்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த திரைப்படம் தான் ‘பதாய் ஹோ’.இதன் தமிழ் ரீமேக் உரிமையை வலிமை பட தயாரிப்பாளரான போனி கபூர் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இந்த பாலிவுட் படத்தினை தமிழில் ஆர்ஜே பாலாஜி இயககவதுடன் அதில் ஆயுஷ்மான் குரானா நடித்த கதாபாத்திரத்தில் பாலாஜி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
மேலும் அவரது தந்தை கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இந்த படத்திற்கு ‘வீட்ல விஷேசங்க’ என்று பெயரிட உள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அடுத்ததாக தயாரிக்கவிருக்கும் படத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…