ஹிந்தி திரைஉலகு மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம் வாய்ந்த நடிகை தீபிகா படுகோன், இவர் தற்போது நடித்து முடித்த சப்பக் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். நடிப்பில் கலக்கும் இவர் இந்த திரைப்படத்தின் கதை லட்சுமி அகர்வால் என்ற ஒரு பெண் முகத்தில் ஆசிட் ஊற்றி நடந்த சம்பவத்தை உண்மை கதையை தீபிகா படுகோன் ஏற்று நடித்துள்ளார். இத்திரைப்படம் பல சர்ச்சைக்குள்ளாகி இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சித் தலைவரான அகிலேஷ் யாதவ் நடிகை தீபிகா படுகோனின் ‘சப்பக்’ திரைப்படத்தை பார்க்க லக்னோவில் உள்ள ஒரு பிரபலமான தியேட்டரையே முன்பதிவு செய்யப்பட்டுள்ளார். பின்னர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து இத்திரைப்படத்தைக் பார்க்கவுள்ளார். சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சில மர்ம நபர்கள் புகுந்து மாணவர்கள், ஆசிரியர்களை தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தீபிகா தெரிவித்தார்.
இதனால், ட்விட்டரில் பலரும் தீபிகா படுகோனுக்கு ஒருபக்கம் பாராட்டுகளைத் தெரிவித்து வந்தனர். ஆனாலும், பாஜக ஆதரவாளர்கள் பலர் தீபிகாவின் ’சப்பக்’ திரைப்படத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கூடுதலாக, முன்பதிவு செய்திருந்த திரைப்பட டிக்கெட்டுகளையும் கிழித்து எறிவது போன்றும் வீடியோ வெளியிட்டு, இத்தகைய சூழலில் நடிகை தீபிகாவின் செயலுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவரது சப்பக் திரைப்படத்துக்கு பேராதரவு தர ஒரு தியேட்டரை முன்பதிவு செய்துள்ளார் அகிலேஷ் யாதவ். மேலும், தீபிகாவுக்கு ஆதரவாக மத்திய பிரதேஷ் முதல்வர் கமல்நாத் ’சப்பக்’ திரைப்படத்துக்கு வரி விலக்கு அறிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…