கொரோனா வைரஸ் ஆராய்ச்சிய்ன் முடிவில் இருந்த ஆராய்ச்சியாளர் சுட்டுக்கொலை…

Published by
Kaliraj

உலகம் முழுவதையும் தனது கோர பிடியில் சிக்க வைத்து வரும் கொடிய கொரோனா வைரஸ் பிடியிலிருந்து தப்ப உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளை  மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆராய்ச்சியாளர் தற்போது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டது  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த சுட்டு கொல்லப்பட்ட ஆராய்ச்சியாளர் பெயர் டாக்டர் பிங் லியு என்பதாகும். இவர்,  கடந்த சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்தார். 

இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் ஆய்வில் ஆராய்ச்சியாளர் இறந்த ஒரு மணி நேரத்துக்கு பின்பு அவர் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு காரில் ஒரு  நபர் தலையில் சுடப்பட்டு இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர். பின் நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில், இரண்டாவதாக கண்டுபிடிக்கப்பட்ட நபர் தான் ஆராய்ச்சியாளர் பிங் லியுவின் நெருங்கிய  நண்பர் ஹாவோக்யு என்பதும்  அவர்தான் பிங் லியுவை கொலை செய்துவிட்டு பின்பு காரில் சென்று  தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார் என அந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த கொலைக்கான காரணம் உறுதியாக தெரியவில்லை.

அந்த ஆராய்ச்சியாளர்  டாக்டர் பிங் லியு பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவி பேராசிரியராகப் பணியாற்றி வந்தவர், அவர்,  கணக்கீட்டு அறிவியல் துறையில் முனைவர் பட்டமும், கம்ப்யூட்டேஷன் மாடலிங் மற்றும் அனலைசிஸ் ஆப் பயோலாஜிக்கல் சிஸ்டம்ஸ் டைனமிக்ஸ் துறை ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர். தற்போது கொரோனா வைரஸ் செல்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வந்த டாக்டர் பிங் லியு, அதன் முடிவின் விளிம்பில் இருந்ததாக அத்துறையின் தலைவர் இவேட் பஹார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Published by
Kaliraj

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

3 hours ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

3 hours ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

4 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

4 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

5 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

6 hours ago