சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தற்போது தெலுங்கில் வெளியாக இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “டாக்டர்”. இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. கடந்த மார்ச் மாதம் 26 – ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பின் படம் ஓடிடியில் வெளியாகுமா அல்லது திரையரங்குகளில் வெளியாகுமா என்ற குழம்பம் ரசிகர்களுக்கு மத்தியில் நிலவியது.
அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேஜேஆர் நிறுவனம் வரும் அக்டோபர் 9 -ஆம் தேதி திரையரங்குகளில் இந்த படம் வெளியாகும் என அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தை வருண் டாக்டர் என்ற பெயரில் தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்யவுள்ளனர்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…