ஸ்மார்ட் போன் விற்பனையில் என்றும் ராஜாவாக ஆப்பிள் நிறுவனம்.. உலக அளவில் அதிகம் விற்பனையாகி சாதனை..

Published by
Kaliraj
  • உலகளவில் அதிக விற்பனையான ஸ்மார்ட்போன் வகைகளில் இந்த ஆண்டு ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர் மாடல்  மாறியுள்ளது.
  • இதே போல் ஓப்போ, சியோமி நிறுவனங்களும் குறிப்பிட்ட அளவு முன்னேற்றம்.

இந்த  2019 மூன்றாம் காலாண்டில் 3 % பங்கை ஆப்பிள் ஐபோன் எக்ஸ்ஆர்  கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த  செப்டம்பர் 2018  நான்காம் காலாண்டுலிருந்து ஆப்பிள்  ஐபோன் எக்ஸ்ஆர் ஸ்மார்ட் போன் விற்பனையில் தனி முத்திரையை பதித்து வருகிறது என்று கவுண்டர்பாயிண்ட் ஆய்வில் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள்  ஐபோன் எக்ஸ்ஆர்  மாடல் மட்டும் மொத்த ஆப்பிள் நிறுவன  பொருட்களின் விற்பனையில் 25% மேலாக வருவாயை ஈட்டியுள்ளது. இது ஆப்பிள் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலுமே ஆப்பிள்  ஐபோன் எக்ஸ்ஆர்   விற்பனையில் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல்  ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையில், ஆப்பிள்  ஐபோன் 11 மாடலும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஓப்போ நிறுவனத்தின் எ9, எ5எஸ் மற்றும் எ5 ஆகிய மூன்று மாடல்களும் விற்பனையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதேபோல் சியோமியை பொறுத்தவரை, ரெட்மி 7ஏ மாடல் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளது. சியோமியின் மொத்த விற்பனையில் ரெட்மி 7எ, 50% வருவாயை எட்டியுள்ளது. எனினும் சியோமி நிறுவனத்தின் முதல் 10 மாடல்களின் மொத்த  வருவாய் முந்தைய காலாண்டை விட 30 % குறைந்துள்ளதாக கவுண்டர்பாயிண்ட் ஆய்வு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புதிதாக எத்தனை மாடல் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சந்தையில் வந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் இடம் மாறாமல் அப்படியே தொடர்கிறது.

Published by
Kaliraj

Recent Posts

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

சதம் அடிக்கிறதுல நான் ஸ்பெஷல்! வரலாற்று சாதனை படைத்த ரிஷப் பண்ட்!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் (ஜூன்…

9 hours ago

இரவு 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக…

10 hours ago

ரோ-கோ இல்ல கேட்ச் விட்டீங்கனா ஒரு போட்டியை கூட வெல்ல முடியாது! இந்தியாவை எச்சரித்த ஸ்டூவர்ட் பிராட்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

10 hours ago

நீட் தேர்வில் ஆதி முதல் அந்தம் வரை பணம் தான்! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

சென்னை :  2025 நீட் (NEET-UG) தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு…

11 hours ago

உதவி கேட்டு கடிதம் அனுப்பிய ஈரான்! “நாங்க ரெடி” என உறுதி கொடுத்த ரஷ்யா!

ரஷ்யா : இஸ்ரேல் vs ஈரான் இடையே  11-வது நாளாக கடுமையாக போர் நடைபெற்று வருகிறது. இந்த போர் எப்போது முடிவுக்கு…

11 hours ago

“நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி”…சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்!

லீட்ஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல்…

12 hours ago