இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள கோப்ரா படத்தின் இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் விக்ரம் பல வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தை இமைக்கா நொடிகள் என்ற வெற்றி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்க 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தியில் உருவாகும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டிருந்தது .அதனை தொடர்ந்து 10 நாட்கள் சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பை தொடர்ந்து விக்ரம் தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கான படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் .
அதன் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்து விட்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் கோப்ரா படப்பிடிப்பில் விக்ரம் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது . கோப்ரா படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் 32 நாட்கள் உள்ளதாகவும் ,அதனை ரஷ்யாவில் நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திலிருந்து ஒரு பாடல் மற்றும் டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்திலிருந்து அடுத்த அப்டேட்டானா இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்ள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…