அமேசானில் வெளியாகும் சூரரைப்போற்று அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

Published by
பால முருகன்

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடுவதாக  சூர்யா அறிவித்துள்ளார்.

சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் சூரரைப்போற்று  இந்த படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார் இத்திரைப்படத்தில் இருந்து ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களும் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகம் ஆகியது என்று கூறலாம்.

இந்நிலையில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என்று அனைத்து சூர்யா ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டு நிலையில் தற்போது அமேசான் பிரைமில் வருகின்ற அக்டோபர் மாதம் 30 ம் தேதி வெளியிடுவதாக  நடிகர் சூர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்

இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது’ என்ற எழுத்தாளர் பிரபஞ்சனின் வார்த்தைகள் நம்பிக்கையின் ஊற்று. கண்ணுக்கு தெரியாத வைரஸ், ஒட்டுமொத்த மனிதகுலத்தின் செயல்பாட்டையும் நிறுத்தி வைத்திருக்கும் சூழலில், பிரச்சனைகளில் மூழ்கிவிடாமல், நம்பிக்கையுடன் எதிர்நீச்சல் போடுவதே முக்கியம்

இயக்குனர் ‘சுதா கோங்குரா அவர்களின் பல ஆண்டுகால உழைப்பில் உருவாகியுள்ள, ‘சூரரைப் போற்று திரைப்படம் எனது திரைப்பயணத்தில் மிகச்சிறந்த படமாக நிச்சயம் இருக்கும். மிகப்பெரிய வெற்றியை அளிக்கும் என்று நம்புகிற திரைப்படத்தை திரையரங்கில் அமர்ந்து என் பேரன்பிற்குரிய சினிமா ரசிகர்களுடன் கண்டுகளிக்கவே மனம் ஆவல் கொள்கிறது ஆனால், காலம் தற்போது அதை அனுமதிக்கவில்லை. பல்துறை கலைஞர்களின் கற்பனை திறனிலும், கடுமையான உழைப்பில் உருவாகும் திரைப்படம் சரியான நேரத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பது தயாரிப்பாளரின் முக்கிய கடமை

எனது 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதுவரை எட்டு படங்களைத் தயாரித்து வெளியீடு செய்திருக்கிறது. மேலும் பத்து படங்கள் தயாரிப்பில் உள்ளன. என்னைச் சார்ந்திருக்கிற படைப்பாளிகள் உட்பட பலரின் நலன் கருதி முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது. சோதனை மிகுந்த காலகட்டத்தில், நடிகராக இல்லாமல், தயாரிப்பாளராக முடிவெடுப்பதே சரியாக இருக்குமென நம்புகிறேன்

குரரைப் போற்று’ திரைப்படம் ‘அமேசான் ப்ரைம் வீடியோ’ மூலம் இணையம் வழி வெளியிட முடிவு செய்திருக்கிறோம். தயாரிப்பாளராக மனசாட்சியுடன் எடுத்த இந்த முடிவை திரையுலகை சார்ந்தவர்களும் என் திரைப்படங்களைத் திரையரங்கில் காண விரும்புகிற பொதுமக்களும், நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த தம்பி தங்கைகள் உள்ளிட்ட அனைவரும் புரிந்துகொள்ள வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் உங்கள் அனைவரின் மனம்கவர்ந்த திரைப்படம் சூரரைப் போற்று’ நிச்சயம் அமையும்.

மக்கள் மகிழ்ச்சியோடு திரையரங்கம் வந்து படம் பார்க்கும் இயல்புநிலை திரும்புவதற்குள், கடினமாக உழைத்து, ஒன்றுக்கு இரண்டு படங்களில் நடித்து திரையரங்கில் ரிலீஸ் செய்துவிட முடியுமென நம்புகிறேன். அதற்கான முயற்சிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறேன்.

இருப்பதை அனைவருடன் பகிர்ந்து வாழ்வதே சிறந்த வாழ்வு. இந்த எண்ணத்தை இன்றளவும் செயல்படுத்தியும் வருகிறேன். ‘குரரைப் போற்று போற்று’ திரைப்படம் வெளியிட்டு தொகையில் இருந்து தேவையுள்ளவர்களுக்கு, ‘ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க முடிவு செய்திருக்கிறேன்

பொதுமக்களுக்கும், திரையுலகை சார்ந்தவர்களுக்கும் தன்னலம் பாராமல் ‘கொரோனா யுத்த களத்தில் முன்நின்று பணியாற்றிய வர்களுக்கும், இந்த ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும் உரியவர்களிடம் ஆலோசனை செய்து அதற்கான விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும், வாழ்த்தும் தொடர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இந்த நெருக்கடி சூழலை மனவுறுதியுடன் எதிர்த்து மீண்டு எழுவோம் நன்றி. என்று பதிவு செய்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறை தண்டனை.!

வங்கதேசம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பங்களாதேஷின் பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இன்று சர்வதேச குற்றவியல்…

7 minutes ago

INDvsENG : ஓய்வுக்கு டைம் இருந்துச்சு…பும்ரா கண்டிப்பா விளையாடனும்! அடம் பிடிக்கும் புட்சர்!

எட்ஜ்பாஸ்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெறவுள்ள…

49 minutes ago

மன்னிப்பு கேட்க சொல்லியும் கேட்கல…பாமகவில் இருந்து அருளை நீக்கிய அன்புமணி!

சென்னை :  சேலம் மேற்கு தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) எம்.எல்.ஏ. அருளை கட்சியிலிருந்து நீக்குவதாக பாமக தலைவர்…

1 hour ago

முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொகை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: முதல்முறையாக வேலைக்கு செல்வோருக்கு ஒரு மாத ஊதியமாக ரூ.15,000 வரை இரண்டு தவணைகளில் வழங்கும் “வேலைவாய்ப்புடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரண விவகாரம்: அங்கீகரிக்கப்படாத தனிப்படைகளை கலைக்க உத்தரவு!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் இளைஞர் அஜித்குமார் காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

3 hours ago

திருப்புவனம் : உயிரிழந்த இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி!

சிவகங்கை: திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார், காவல் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும்…

4 hours ago