இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ள நிலையில், டென்சென்ட் நிறுவனத்திற்கு 14 பில்லியன் டாலர்களை இழந்துள்ளதாக சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் லடாக், கல்வான் எல்லையில் இந்தியா – சீன ராணுவத்திற்கிடையே நடந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, சீனா செயலிகள் மூலம் தொடர்ந்து பயனர்களின் தகவல்கள் திருடப்படுவதாக குற்றச்சாற்றுகள் எழுந்தது.
இதனையடுத்து, டிக் டாக், ஷேர் இட், ஹலோ, உள்ளிட்ட 59 செயலிகளுக்கு தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தடை விதித்தது. அதன்பின், தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், பப்ஜி உட்பட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் 224 சீனா தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பப்ஜி செயலியை தடை செய்த நிலையில், டென்சென்ட் நிறுவனத்தின் பங்குகள் கடந்த வியாழக்கிழமை மட்டும் 2 சதவீதம் சரிந்துள்ளதாகவும், அந்நிறுவனத்திற்கு 14 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்சார் டவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த பப்ஜி செயலியை 175 மில்லியனுக்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…