அஜித் நடிப்பில் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா திரைப்படம் மார்ச் 5-ம் தேதி மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஒரு அப்டேட் கூட படக்குழு கொடுக்கவில்லை என்பதால் அஜித் ரசிகர்கள் சமூக வளைத்தளத்தில் அப்டேட் கேட்டு வருகிறார்கள். வலிமை அப்டேட் வரவில்லை என்றாலும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைபடங்கள் வெளியாகி அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறது. இந்த மாதம் இறுதிக்குள் வலிமை படத்தின் அப்டேட் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது அஜித் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் புது அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.ஆம்,கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் விஷ்ணு வரதண் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் பில்லா. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தற்போது, இந்த திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளது. தல அஜித் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற பில்லா படத்தினை வரும் மார்ச் மாதம் 5-ம் தேதி திரையரங்குகளில் ரீ ரிலீஸாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மீண்டும் தல அஜித்தினை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் காண்பது ரசிகர்களைடைய பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…