இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ள திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தெரிகிறது.
இந்த நிலையில், தற்போது இப்படத்தில் நடிகர் கருணாஸ் உதவி இயக்குனராக பணியாற்ற இணைந்துள்ளார். படத்தில் இணைந்தது குறித்து சில விஷியங்களையும் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியது ” கானா பாடகராக கலை வாழ்வை தொடங்கிய எனக்கு இவ்வளவு பெரிய அடையாளத்தை கொடுத்தது சினிமாதான்.
தாய்மடியான தமிழ் சினிமாவில் முழுநேரமும் பயணிக்க முடிவெடுத்து உள்ளேன். ஆற்றல்மிகு வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்ற இருக்கிறேன். என்னை இணைத்துக்கொண்ட வெற்றிமாறனுக்கு நன்றி. கடைசிவரை கற்றுக்கொள்வது தான் சினிமாவின் சிறப்பு.
பல திரைப்படங்களில் இப்போது நடித்துக் கொண்டிருந்தாலும், தமிழர் வீரத்தை பறைசாற்றும் இந்தப் படத்தில் பணியாற்றுவது பெருமை. ராமனுக்கு அணிலாக இருப்பதை போல, இந்த வெற்றி அணியில், வெற்றிமாறனுக்கு நானும் ஓர் அணிலாக இருக்க விரும்பினேன். நீண்ட காலமாக எனக்குள் இருந்த உதவி இயக்குநர் கனவை வாடிவாசல் திறந்துவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…
பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…