சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் தியேட்டரில் திரௌபதி திரைப்படம் சிறப்பு காட்சி நேற்று போடப்பட்டது. அப்போது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மற்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் ஆகியோர் படத்தை பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, எந்த ஒரு சாதியையும் அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் காண்பிக்கவில்லை எனவும், உண்மை காதலுக்கும் நாடக காதலுக்கும் உள்ள வித்தியாசங்களை இப்படம் காட்டியுள்ளது என குறிப்பிட்டார்.
இதையடுத்து பேசிய அர்ஜுன் சம்பத், அனைத்து தரப்பு மக்களும் இந்தப் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கவேண்டும் என்றும், இப்படத்தில் எந்த ஒரு சமுதாயத்தையும் புண்படுத்தும் வகையில் இப்படம் இல்லை என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், சமூக விழிப்புணர்வு இப்படத்தின் மூலம் ஏற்படுத்தப்படும் எனவும் இந்த படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…