பிரான்ஸ் நாட்டில் மூன்று போலீஸ் அதிகாரிகளை, ஒரு துப்பாக்கிதாரி சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் ஒரு குடும்ப வன்முறை சம்பவத்துக்காக காவல்துறைக்கு அழைப்பு விடுக்கப்பட்டடுள்ளது. அதாவது, புதன்கிழமை நேற்றய தினம் செயின்ட்-ஜஸ்ட் என்ற கிராமத்தில் நடந்த குடும்ப வன்முறை சம்பவத்தால், அந்த பெண், வீட்டின் கூரைக்கு மேல் தப்பிச் செல்ல முயன்றுள்ளார். அப்போது துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர், அந்த குற்றவாளி வீட்டுக்கு தீ வைத்துவிட்டு, அங்கு வந்த மேலும் இரண்டு போலீஸ் அதிகாரியை சுட்டு கொன்றுள்ளார். இதன் பின் கூரை மீது ஏறிய பெண்ணை காவல்துறை பாதுகாப்பாக மீட்டனர். 48 வயதான அந்த சந்தேக நபரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே, குழந்தைகளை அடைத்துவைத்த ஒரு விவகாரத்தில் அந்த குற்றவாளியை போலீஸ் அதிகாரிகளுக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது.
காவல்துறை கூறுகையில், அந்த வீடு எரிந்துவிட்டதாகவும், குற்றவாளி உள்ளே இருக்கிறாரா, தப்பிவிட்டாரா என்று கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். ஆனால், உள்துறை மந்திரி ஜெரால்ட் டர்மனின் பின்னர் சந்தேக நபர் இறந்து கிடந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் அந்த நபர் தனது காரில் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையடுத்து, துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்த மூன்று போலீஸ் அதிகாரிகளின் குடும்பங்களுக்கு தனது வருத்தத்தை தெரிவிப்பதாக பிரதமர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். 21 வயதான பிரிக் அர்னோ மவெல், லெப்டின் சிரில் மோரல் மற்றும் அட்ஜூடண்ட் ரமி டுபுயிஸ் 37 ஆகிய மூன்று போலீஸ் அதிகாரிகள் துப்பாக்கி சம்பவத்தில் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…
டெல்லி : ஓலா, உபர் போன்ற டாக்ஸி நிறுவனங்கள் "Peak hours" நேரங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க மத்திய அரசு…
தேனி : சிவகங்கை இளைஞர் அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி கொண்டிருக்கும் நிலையில், அதேபோல்…
வாஷிங்டன் : ஓபன் ஏ.ஐ. தலைவர் சாம் ஆல்ட்மன், ''சாட்ஜிபிடி-யை மக்கள் அதிகம் நம்புவதாகவும், ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI)…