நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை பார்த்து விட்டு இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. திகில் கலந்த ஹாரர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் எஸ்ஜே சூர்யா, ரெஜினா கெசன்ட்ரா , நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இந்த திரைப்படம் வருகின்ற 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அணைத்து மக்களுக்கும் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். மேலும், தற்போது இந்த படத்திற்கான ஸ்னீக் பீக் வீடியோ நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாகியது என்றே கூறலாம்.
இந்த நிலையில் இந்த ஸ்னீக் பீக் வீடியோ வீடியோவை பார்த்து பலரும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எஸ் ஜே சூர்யா நடிப்பு மிகவும் சிறப்பாக இருக்கிறது. யுவன் செல்வராகவன் வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…