நமது குடியரசு தினத்தை நமக்கு சுதந்திரம் கிடைத்த மூன்றாவது ஆண்டிலிருந்து கொண்டாடி வருகிறோம். அதாவது 1950 ஜனவரி மாதம் 26ம் நாள் முதல் கொண்டாடி வருகிறோம். ஏன் ஜனவரி 26- என்றால், நம் சுதந்திரம் அடைவதற்கு முன் நிறைவேற்றப்பட்ட குறிக்கோள் தீர்மானத்தின் விளைவாக 1946-ம் ஆண்டு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக இந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை ஒன்று அமைக்கப்படுகிறது. இதற்கு சச்சிதானந்த சின்ஹா தலைவராக தேர்ந்தெடுக்கப்படார். அடுத்த சில நாளிலிலே இவர் மரணமடைந்ததால் பின், டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதன் தலைவராக தலைமையேற்றார். பின்னாளில் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு இவரே இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்றார். இந்த அரசியலமைப்பு நிர்ணய சபையின் வரைவுக்குழுத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் நியமிக்கப்படுகிறார். அதன் பின்னர் இந்தக் குழு உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் சட்டங்களை ஆராய்கிறது. அதில் உள்ள சிறந்த சட்டங்களை எடுத்து அதன் அடிப்படையில் இந்தியாவுக்கான அரசியலமைப்பு சட்டங்கள் உருவாக்கப்படுகிறது. பல்வேறு சட்ட நிபனர்கள், அறிஞர் பெருமக்கள் ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பணி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் நிறைவு பெற்றது, அரசியலமைப்பை முடிக்க 2 வருடம் 11 மாதம் 17 நாள் ஆனது. இதை முழுவதுமாக கையால் எழுதியவர் பிரேன் பெகாரி நரேன் ரைசாட் ஆவர். முழுமையாக நிறைவு பெற்ற சட்டங்களை இந்திய அரசு உடனடியாக அமலுக்கு கொண்டு வரவில்லை.1950 ஜனவரி 26 வரை காத்திருந்தார்கள். இதற்கான காரணத்தை அறிய சற்று பின்னோக்கி செல்ல வேண்டியது அவசியம். 1929-ம் ஆண்டு லாகூரில் காங்கிரஸ் மாநாடு கூடிய போது,அந்த மாநாட்டில் முழுமையான சுதந்திரம் பெறுவதே காங்கிரசின் நோக்கம் என்று முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதோடு முழுவதுமான சுதந்திரம் கிடைக்கும் வரை அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26- ம் தேதியை இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடுவது என்ற முடிவை எடுக்கிறார்கள். அதன் அடிப்படையில்தான் ஜனவரி 26 – குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. ஆகஸ்ட் 1949-ம் ஆண்டே அரசியல் அமைப்பு சட்டம் முழு வடிவம் பெற்றுவிட்டாலும் நமது தலைவர்கள் இந்தியாவின் சுதந்திர தினமாக கொண்டாடிய ஜனவரி 26-ம் தேதியே மக்களாட்சி மலர்ந்த நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். மக்களாட்சிக்கு மணிமகுடமாக திகழும் வாக்குரிமை என்பதுவும் அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால், 21 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவருக்கும் கிடைத்த நாளும் இந்த ஜனவரி 26 என்பது குறிப்பிடத்தக்கது.
பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…
காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…
சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில் நாய் கடியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.80 லட்சத்தை தொட்ட நிலையில் 18…
சிவகங்கை : திருப்புவனம் அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் கொடுத்த நிகிதா மீது, பல பண மோசடி…