வடக்கு சிரியாவில் 2 துருக்கிய வீரர்கள் கொல்லப்பட்டதாக துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
துருக்கி ராணுவ கவச வாகனம் தாக்கப்பட்டு, இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு வீரர்களை காயமடைந்துள்ளனர் என்று துருக்கியின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. துருக்கி எல்லைக்கும் வடக்கு அலெப்போவிற்கும் இடையிலான ஒரு பகுதியை உள்ளடக்கிய யூப்ரடீஸ் ஷீல்ட் பகுதியில் நேற்று இந்த தாக்குதல் நடந்தாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘பயங்கரவாத’ இலக்குகளைத் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார் என்று அமைச்சகம் கூறவில்லை, ஆனால், பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளது. துருக்கிக்குள் பல ஆண்டுகளாக கிளர்ச்சியை நடத்தி வரும் குர்திஷ் குழுவின் விரிவாக்கமாக இது கருதப்படுகிறது.
இதனிடையே, துருக்கியில் பல பயங்கர குண்டுவெடிப்புகளுக்கு பின்னர், இஸ்லாமிய அரசு குழுவை வெளியேற்றும் நோக்கத்துடன் தனது முதல் எல்லை தாண்டிய நடவடிக்கையை 2016ல் சிரியாவிற்கு அறிமுகப்படுத்தியது. இது ஆபரேஷன் யூப்ரடீஸ் ஷீல்ட் என்று அழைக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மேலும், துருக்கி, வடக்கு சிரியாவில் மற்ற மூன்று நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்களில் பெரும்பாலோர் ஒய்.பி.ஜி பிரிவை சேர்ந்தவர்கள். ஐ.எஸ் உடன் போராடிய ஒரு பிரிவின் முதுகெலும்பாக அமைந்த சிரிய குர்திஷ் போராளிகளுக்கு அமெரிக்க ஆதரவு அளிப்பதால் துருக்கி அரசு கோபமடைந்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…