சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திரைப்படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
மேலும் இந்த ரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், டாக்டர் படம் திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது. ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று படத்தின் தயாரிப்பாளர் கேஜிஆர் தனது ட்வீட்டர் பக்கத்தில் டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார். தற்போது நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக படத்தை ஓடிடியில் வெளியீடுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் ஆக உள்ளது. விரைவில் படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…