உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் – பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல்!

Published by
பாலா கலியமூர்த்தி

ரஷ்யாவுன் போர் அபாயம் நிலவி வரும் நிலையில் உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதை தடுக்க ரஷ்யா, அந்நாட்டின் மீது போர் தொடுக்க பலவேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உதவி கரம் நீட்ட, ரஷ்யா நேரடியாக போர் தொடுக்காமல் குறுக்கு வழியை கையாண்டு வருகிறது. ஒருபுறம் உக்ரைன் எல்லையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களை குவித்த ரஷ்யா, மறுபுறம் கிளர்ச்சிப் படையை வைத்து உள்நாட்டில் துப்பாக்கி சூடு நடத்தி உக்ரைனுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

ரஷ்யா – உக்ரைன் இடையே நிலவும் போர் பதற்றத்தை குறைக்க அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட உலக நாடுகள் முயற்சி செய்து வரும் நிலையில், கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க் ஆகிய 2 பிராந்தியங்ளை தனி சுதந்திர நாடாக ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் அறிவித்திருந்தார். கிளர்ச்சிப்படை ஆக்கிரமித்த பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாக கூறி அங்கு ரஷ்ய ராணுவம் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் ரஷ்யா எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்படுகிறது. தனி நாடாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கு அமெரிக்கா உடனடியாக பொருளாதார தடை விதித்தது.

உக்ரைன் நாட்டை தம் வசமப்படுத்த ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஊடுருவி வருகிறது. இதனால் பதற்றம் நீடித்து வருகிறது. இந்த சூழலில் உக்ரைனில் இருந்து தூதரக அதிகாரிகளை விரைவில் வெளியேற ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தேசிய அவசர நிலையை பிரகடனப்படுத்தும் திட்டங்களுக்கு உக்ரைனின் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்யா துருப்புகளை அதிகரித்துவரும் நிலையில் பாதுகாப்பு கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.

போர் சூழ்ந்துள்ளதால் அவசர நிலையை உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ரஷ்ய படைகள் எந்த நேரத்திலும் உக்ரைன் நாட்டு எல்லைக்குள் நுழையலாம் எனவும் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் உக்ரைனிலிருந்து பிரிந்து இருக்கும் டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து, அவசரகால  பிரகடனம் நாடு முழுவதும் பொருந்தும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும் என்றும் அதன்பின் நீடிக்கப்படலாம் எனவும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

கவின் கொலை வழக்கு : ‘திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை கண்டிக்கிறேன் – இயக்குநர் பா.ரஞ்சித்

திருநெல்வேலி : மாவட்டம், பாளையங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் நேற்று (ஜூலை 28, 2025) ஐ.டி. ஊழியர் கவின் செல்வகணேஷ்…

1 minute ago

இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!

ஸ்ரீஹரிகோட்டா : இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இணைந்து உருவாக்கிய…

26 minutes ago

கொஞ்சம் அமைதியா இரு…கவுதம் கம்பீருக்கு சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அட்வைஸ்!

மான்செஸ்டர் : இந்தியா-இங்கிலாந்து நான்காவது டெஸ்ட் போட்டி (ஜூலை 27, 2025) ட்ராவில் முடிந்த பிறகு, இந்திய அணியின் பயிற்சியாளர்…

1 hour ago

தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (30-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால்…

2 hours ago

நெல்லை கவின் கொலை: உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!

திருநெல்வேலி : மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த கவின் செல்வ கணேஷ் (வயது 27), சென்னையில் பிரபல ஐ.டி. நிறுவனமான டி.சி.எஸ்-இல்…

2 hours ago

அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு…

2 hours ago