வாட்ஸ்அப்-க்கு பதிலாக “சிக்னல்” யூஸ் பண்ணுங்க., எலோன் மஸ்க் பரிந்துரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகின்முதல் பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார்.

வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது. அதுவும், பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் செயலியில் நுழைய முடியாது என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் உபயோகிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

வாட்ஸ் அப்பின் இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். வாட்ஸ் அப் கணக்கை நீக்கிவிட்டு டெலிகிராமுக்கு மாறுவதாகவும் பதிவு செய்து, ட்விட்டரில் #WhatsappNewPolicy என்ற ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக பயனாளர்கள் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி மாற்று செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. Signal

இந்நிலையில், உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பயனாளர்களின் தனியுரிமையை மையமாகக் கொண்ட சிக்னல் (மெசேஜ் அப்) எனப்படும் மற்றொரு செயலியை பயன்படுத்துமாறு மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த செயலி பரவலாக உள்ளது. இதனை பாதுகாப்பு ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள், தனியுரிமை ஆராய்ச்சியாளர்கள் என பல வகையான பயனாளிகள் இந்த சிக்னல் செயலியை பரவலாக பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ் அப் செயலியை போல் (end-to-end encryption) பாதுகாப்பு வசதி கொண்டது. அதாவது, 3rd party apps-ல் உங்களின் விவரங்கள் பகிரப்படாது. எலோன் மஸ்க்கின் பரிந்துரையால், சிக்னல் செயலி புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்றும் ஒரு பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் புதிய பயனாளர்கள் அதிகரிப்பதால் செல்போன் எண்ணிக்கை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனையால் இந்த அதிகரிப்பு காணப்படுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

“கச்சத்தீவை தாரை வார்த்து கொடுத்தது திமுக, மீனவர்கள் மீது அக்கறையில்லை” – இபிஎஸ் விமர்சனம்!

சென்னை : மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் பரப்புரை மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு…

3 hours ago

“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று…

4 hours ago

பீகாரில் ஆகஸ்ட் 1 முதல் இலவச மின்சாரம் – நிதிஷ்குமார் அறிவிப்பு.!

பீகார் : இந்த ஆண்டு பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கு முன்னதாக நிதிஷ் அரசு…

5 hours ago

எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!

டெல்லி : கடந்த மாதம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அது போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். அதில்…

5 hours ago

ரயிலில் ரூ.4 கோடி பிடிபட்ட விவகாரம்: பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்தது உறுதி – சிபிசிஐடி.!

நெல்லை : 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பு தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில்,…

6 hours ago

‘ஹாரி பாட்டர்’ நடிகைக்கு வாகனம் ஓட்ட இடைக்கால தடை.! ஏன் தெரியுமா.?

லண்டன் : 'ஹாரி பாட்டர்' படத் தொடரில் ஹெர்மியோன் கிரேன்ஜர் வேடத்தில் நடித்து பிரபலமான ஹாலிவுட் நடிகை எம்மா வாட்சன்…

6 hours ago