சந்தோஷ் ஜெயகுமாரின் இரண்டாம் குத்து திரைப்படம் தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதை அடுத்து தற்போது அந்த படத்திலிருந்து 3 நிமிட வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2018-ஆம் ஆண்டு சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘இரட்டு அறையில் முரட்டு குத்து’.படு மோசமான விமர்சனங்களைப் பெற்ற இந்த திரைப்படம் பெரிய அளவில் வசூல் செய்தது . இந்த படத்தில் கௌதம் கார்த்திக்,யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள் . அதனையடுத்து சமீபத்தில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது .
அதன்படி ‘இரண்டாம் குத்து” என்று பெயரிடப்பட்ட அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி பல விமர்சனங்களையும் ,சர்ச்சையையும் உருவாக்கியது . இயக்குனர் பாரதிராஜா உட்பட பலர் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர் . முதல் பாகத்தின் இயக்குநரான சந்தோஷ் ஜெயகுமார் ,டேனியல் ,நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தினை தீபாவளி தினத்தன்று திரையரங்குகளில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
நேற்றைய தினம் இந்த படத்தின் டீசரை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது . இந்த நிலையில் தற்போது இரண்டாம் குத்து படத்திலிருந்து 3 நிமிட ஸ்னீக் வீடியோவை வெளியிட்டுள்ளனர் .
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…