விஜயின் மாஸ்டர் படத்தை VijayTheMaster என்ற பெயருடன் ஹிந்தியில் ஃபஸ்ட் லுக்கை படக்குழு அதிகாரபூர்வகமாக வெளியிட்டுள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று சாதனை படைத்தது.
மாஸ்டர் படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் மாஸ்டர் படத்திற்கு யு/ஏ சான்றுதலை தணிக்கை குழு கொடுத்திருந்தது. இத்திரைப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் டப் செய்து திரையிடப்படவுள்ளது. அதன்படி அண்மையில் தெலுங்கில் மாஸ்டர் படத்தின் ஃபஸ்ட் லுக் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டது.
இந்நிலையில், தற்போது மாஸ்டர் படத்தை VijayTheMaster என்ற பெயருடன் ஹிந்தியில் ஃபஸ்ட் லுக்கை படக்குழு அதிகாரபூர்வகமாக வெளியிட்டுள்ளது. இதனை B4U Motion Pictures நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விஜயின் திரைப்பட வரலாற்றில் முதன் முறையாக மாஸ்டர் படம் நேரடியாக ஹிந்தி டப் செய்து திரையிடப்பட உள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. தற்போது வெளிவந்துள்ள VijayTheMaster லுக்கை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…