விஷால் நடிக்கும் “சக்ரா” படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தொடங்கப்பட்டது.
தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர் விஷால். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பெரிய அளவில் ரீச் ஆகவில்லை. தற்போது அவர்களது ரசிகர்களின் எதிர்பார்ப்பு துப்பறிவாளன் 2 படத்தில் தான் நிலவுகிறது. அதிலும் பல பிரச்சனைகள், அதாவது இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷாலுக்கும் இடையில் நிலவி வந்த பிரச்சினைகளால் சர்ச்சைகளுக்கு உள்ளானார்.தற்போது அந்த படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடிக்கிறார். மேலும் மருது படத்தை இயக்கிய எம். முத்தையா அவர்கள் இயக்கும் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். மேலும் இவர் “சக்ரா” என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கிற்கு முன்பு முடிவடைந்தது.
இந்த படத்தை எம். எஸ். ஆனந்த் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் விஷாலின் தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்தப் படத்தில் ரெஜினா கெசன்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் கதாநாயகியாக நடிக்கின்றனர். மேலும் அவர்களுடன் ரோபோ சங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரும், டிரைலரும் ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பையே பெற்றிருந்தது. சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கிய நிலையில், சக்ரா படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தொடங்கப்பட்டது. விரைவில் இப்படத்தின் ரிலீஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
சென்னை : 2026 தேர்தலில் முதல்வர் வேட்பாளர் விஜய் என்று தவெக அறிவித்துள்ளது. 2026-ல் தவெக தலைமையில் தான் கூட்டணி…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 2-6, 2025, எட்ஜ்பாஸ்டன், பர்மிங்ஹாம்) இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்,…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (ஜூலை 4, 2025) சென்னை பனையூரில்…
திருப்பூர் : மாவட்டம், அவிநாசி அருகே கைகாட்டிபுதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா (வயது 27), வரதட்சணை கொடுமை காரணமாக ஜூன்…