அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் புதிய அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,ஜோ பைடன், அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், டிரம்பின் அலட்சியத்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் பரவியுள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மக்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், மக்கள் அனைவரும் கடந்த மாதம் ஏப்ரல் முதல் முகக்கவசம் அணிந்திருந்தால், 50,000-க்கும் அதிகமான மக்களை காப்பாற்றியிருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறியதாக தெரிவித்த அவர், மக்களை முகக்கவசம் அணியுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…