சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பானது மார்ச் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிம்பு தனது ஈஸ்வரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு எனும் படத்தில் நடித்து வருகிறார். சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் .
மாநாடு படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞனான அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சமீபத்தில் மாநாடு படத்தின் டீசர் வெளியாகி வைரலாகியது குறிப்பிடத்தக்கது பிரமாண்ட அரசியல் படமாக உருவாகும் இந்த மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாகவும்,அதற்காக சென்னை பிலிம் சிட்டியில் அரசியல் மாநாடு போன்ற பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு குறித்த புது தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது சிம்புவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மார்ச் 15 அல்லது 20-ம் தேதிக்குள் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போது மாநாடு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள எஸ்ஜே சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்து வருவதால் தான் மாநாடு படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் சிம்பு மாநாடு படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு பத்து தல மற்றும் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர் : மாவட்டம் அவிநாசியில் புதுமணப் பெண் ரிதன்யா (27) தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட அவரது…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி, 2025 ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் இரண்டு நாள் பயணமாக…
லண்டன் : இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று…
குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு…
சென்னை : தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் (TNDALU), 2025-2026 கல்வியாண்டிற்கான 3 ஆண்டு எல்.எல்.பி. (LL.B) சட்டப்படிப்பு…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (11-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…