செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க கோரி நடிகர் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் ஃபேவரைட் இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் செல்வராகவன் .இவரது திரைப்பயண வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று 7ஜி ரெயின்போ காலனி . கடந்த 2004-ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சோனியா அகர்வால் கதாநாயகியாகவும் ,இந்த படத்தின் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னத்தின் மகன் ரவி கிருஷ்ணா கதாநாயகனாகவும் நடித்திருந்தனர்.
எப்போதும் போல தனது வித்தியாசமான பாணியில் இயக்கியிருந்த செல்வராகவனின் இந்த படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.அதனுடன் படத்தின் பாடல்களை ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர்.ஏனெனில் படத்திற்காக சிறந்த பாடல்களை இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா தான்.இந்த நிலையில் 7ஜி ரெயின்போ காலனி படத்தினை குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.அதாவது முதலில் இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க கோரி வேறு இரண்டு நடிகர்களிடம் தான் பேசப்பட்டதாம் .ஆம் 7ஜி ரெயின்போ காலனி படத்தின் கதையை முதலில் சூர்யா மற்றும் மாதவன் ஆகியோரிடம் தான் முதலில் கூறியதாகவும், அவர்கள் இருவரும் வேறு படங்களில் பிசியாக இருந்ததால் இந்த பட வாய்ப்பை நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…