தெலுங்கு சினிமாவில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் தெரிந்த நடிகராகி உள்ளார் விஜய் தேவரகொண்டா. அதிலும், தென்னிந்திய சினிமா ரசிகர்களுக்கு இவரை நன்றாகவே தெரியும். அதனால் தனது அடுத்தடுத்த படங்களை தென்னிந்திய மொழிகளில் டப் செய்து வெளியிட்டு வருகின்றனர். கடைசியாக டியர் காம்ரேட் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் எனும் திரைப்படத்தில் விஜய் தேவரைக்கொண்டா நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ராஷிகண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ் கேத்தரின் தெரசா என தென்னிந்திய நடிகைகளும், ஒரு பிரேசில் மாடலான இஸபெல் என்ற மாடலும் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை கிராந்தி மாதவ் என்பவர் இயக்கி வருகிறார். கோபி சந்தர் இசையமைத்து வருகிறார். இப்படம் முழுக்க முழுக்க இளமை துள்ளலான காதல் கதை என கூறப்படுகிறது.
கர்நாடகா : போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெங்களூரு உட்பட, இந்தியாவின் முக்கிய நகரங்களில் விரைவான மற்றும் மலிவு விலையில் பைக்…
டெல் அவிவ்: இஸ்ரேல், ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் மீது…
சென்னை : அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனின் மகன் ராஜாவை ரூ.17 கோடி பண மோசடி வழக்கில் சென்னை மத்திய…
சென்னை : நாடு முழுவதும் மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் சேர்ந்த ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.…
சென்னை : தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக, ''ஆளுநர் விருதுகள்'' 2025 ஆம் ஆண்டிற்கான ஆளுநர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது சமூக…
குஜராத் : குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஜூன் 12 அன்று விபத்துக்குள்ளானது. இந்த…