இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா புதிய திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கு இணையாக இணையாக ரசிகர்கள் கொண்ட ஒரு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று கூறலாம். 1997-ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான அரவிந்தன் என்ற படத்திற்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னணி இசையை ரசிகர்களுக்கு பிடித்தவாறு வழங்குவதில் சிறந்தவர் என்பதால் இவரை ரசிகர்கள் “KING OF BGM” என்று அழைக்கிறார்கள். நேற்றுடன் யுவன் ஷங்கர் ராஜா திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்தார்.
இந்நிலையில், நேற்று இதற்காக விழா ஒன்று நடத்தப்பட்டது. விழாவில் பல முக்கியமான விஷயங்களை பகிர்ந்த யுவன் தான் ஒரு படம் இயக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது, யுவன் ஷங்கர் ராஜா ஒரு பெண் சார்ந்த ஸ்கிரிப்டை ஒன்றை உருவாக்கியுள்ளாராம்.
இந்த படத்திற்கான வேலை இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இசை, தயாரிப்பு என கலக்கி வரும் யுவன் தற்போது யுவன் இயக்குனராக களமிறங்கவுள்ளதால் அவரது ரசிகர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகிறார்கள்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…