இன்றைய (17.12.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
Sharmi

மேஷம் :  இன்றைய நாள் நீங்கள் அறிவுத்திறனை இழக்க நேரிடும். உத்தியோகத்தில் மந்தமான சூழ்நிலை நிலவும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று பண வரவு சிறப்பாக இருக்காது. மூட்டு மற்றும் தோள் வலிக்கான வாய்ப்புகள் அதிகம்.

ரிஷபம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்வீர்கள். இன்று காதலுக்கு உகந்த நாள் இல்லை. இன்று பணவரவு குறைவாக இருக்கும். பதட்டம் காரணமாக ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

மிதுனம் : இன்றைய தினம் உங்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உங்கள் மனைவியிடத்தில் உங்களது கருத்துக்களை திணிக்க வேண்டாம். பணவரவு திருப்திகரமாக இருக்காது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும்.

கடகம் : இன்று உங்களுக்கு நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான நாள். இன்று உத்தியோக வேலையை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க இயலாது. காதலுக்கு உகந்த நாள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் : இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். உத்தியோக வேலையில் சாதகமான சூழ்நிலை அமையாது. உங்கள் மனைவிடத்தில் வாக்குவாதம் ஏற்படலாம். பணவரவு திருப்திகரமாக இருக்காது. கால் வலி இருக்கும்.

கன்னி : இன்றைய நாளில் தடைகள் அதிகம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். இன்று கவலையாக இருக்க நேரும். உத்தியோக வேலையில் இறுக்கமான சூழ்நிலை நிலவும். உங்கள் மனைவியிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்றைய நாளில் செலவுகள் அதிகமாக காணப்படும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்றைய நாள் நீங்கள் அமைதியாக இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோக இடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். உங்கள் மனைவியிடத்தில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணவரவு குறைவாக இருக்கும். தொடை மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

விருச்சிகம் : இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். பல வாய்ப்புகள் கிடைக்கும். முயற்சிக்கு வெற்றி உண்டு. உத்தியோகத்தில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்று உங்களுக்கு சாதகமான சூழ்நிலை அமையும். உத்தியோக வேலையில் திட்டமிட்டு செயல்படுத்துங்கள். இன்று உங்கள் துணையிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாளில் வரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு திறமையை பயன்படுத்த வேண்டும். உத்தியோக இடங்களில் பணிகளை எளிதாக செய்து உயர் அதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் துணையிடம் பேசும்பொழுது வார்த்தைகளில் கவனம் தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். பல் வலி அல்லது செரிமான கோளாறு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். உத்தியோக வேலையில் முன்னேற்றம் பெற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மீனம் : இன்றைய நாள் முன்னேற்றத்துடன் அமையும். உத்தியோக வேலையில் கவனமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் மனைவியிடம் நட்புணர்வுடன் நடந்து கொள்ளுங்கள். இன்று பண வரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

1 minute ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

57 minutes ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

1 hour ago

பதிலுக்கு பதில் தாக்குதல் தான்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…

3 hours ago

ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…

4 hours ago

தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…

4 hours ago