heavy rain [File Image]
வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
அதன்படி, தமிழகத்தின் கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
இது போக, வடக்கு கேரள- கர்நாடக கடலோரப்பகுதிகள், அரபிக்கடல் பகுதிகள், இலட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு நாள் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துவிட்டு, இன்று…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துவிட்டு, ஜூலை 26, 2025 அன்று மாலை 7:50 மணிக்கு…
தூத்துக்குடி : பிரதமர் நரேந்திர மோடி, மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு, ஜூலை 26 இன்று அன்று மாலை 7:50 மணிக்கு தூத்துக்குடி…
சென்னை : இன்றயை தலைமுறையினர் பலருக்கும் பேவரைட் இயக்குனராக மாறியிருக்கும் இயக்குனர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். இவர் கமல்ஹாசன், ரஜினி, விஜய்,…
மான்செஸ்டர் : இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில் (ஜூலை 23-27, 2025), இந்திய அணியின் இரண்டாவது…
அரியலூர் : பிரதமர் நரேந்திர மோடி, ஜூலை 27, 2025 அன்று அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கைகொண்ட சோழபுரம் சோழீஸ்வரர் கோவிலுக்கு…