சென்னையில் இருந்து 30 கிமீ தொலைவில் தாழ்வு மண்டலம் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 30 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், பொதுமக்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்குமாறும்,வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:நான்கு மாவட்டங்களில் இன்று கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றதனால்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே சமயம்,செங்கல்பட்டு,வேலூர்,திருவண்ணாமலை,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,நாளை முதல் இரண்டு […]
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது. வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இந்த தகவலை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது. இதனால், காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் வேளையில் தீவிர கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 8 வட மாவட்டங்களில் இன்று அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன்னதாக தெரிவித்தது. மேலும்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஸ்ரீ ஹரிகோட்டா இடையே கடலூர் […]
சென்னை:காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தென் கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில்,ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மாலை காரைக்கால் ஹரிகோட்டா இடையே கடலூர் அருகே கரையைக் கடக்கும் என்று […]
நவம்பர் 13 ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான பிறகு மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தற்போது வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும்,அதன்பிறகு இது வடமேற்கு நோக்கி நகர்ந்து கரையை கடக்கும் என்றும் வானிலை […]
சென்னை :தமிழகத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன் விவரம் பின்வருமாறு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,கடலூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை,புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, அரியலூர், பெரம்பலூர், விருதுநகர்,சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கரூர், தேனி, திண்டுக்கல்,நாமக்கல்,வேலூர்,ராணிப்பேட்டை மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: இந்நிலையில் நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் […]
தமிழகம்:தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி,அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருக்கும் நிலையில்,தென்மேற்கு […]
தமிழகம்:காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் அதிக கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி,தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நவம்பர் 10 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் கனமழை முதல் அதிக […]
தமிழகத்தில் தொடரும் கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடங்கியுள்ள பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பல பகுதிகளில் மலை நீர் வெள்ளம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழை காரணமாக 14 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, […]
தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தமிழகத்தின் 6 மாவட்டங்களிலும், புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்திலும் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் கடலூர்,புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, நகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், அரியலூர், நாமக்கல், திருச்சி உள்பட 20 மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் நவ்.9-ஆம் தேதி காற்றழுத்த உருவாக உள்ளதால், நவ.10,11,12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக – ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நவ்.9-ஆம் தேதி காற்றழுத்த உருவாக உள்ளதால், நவ.10,11,12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக – ஆந்திர கடலோர பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் வங்கக்கடலில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்களும் […]
காலநிலை மாற்றம் காரணமாக 9 ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது. 2021-ஆம் ஆண்டை பொறுத்தவரையில், பலவிதமான பருவநிலை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், வெப்பநிலை அதிகரித்து வருவதால் பனிப் பாறைகள் உருகுகின்றன. இதனால் சில நகரங்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். உலகளாவிய பசுமை இல்ல வாயு வெளியேற்றம் தற்போது குறைய தொடங்கியுள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள் புவி வெப்பமடைதலுக்கான 1.5 டிகிரி செல்சியஸ் உச்சவரம்பை மீறும் பட்சத்தில், அதிக மழைப்பொழிவு […]
தமிழகத்தில் 5 நாட்களுக்கு 10 மாவட்டங்களில் கனமழை தொடரும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளகுறிச்சி, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வருகிற 7ஆம் தேதி […]
அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். தமிழகத்தில் சமீப நாட்களாக பல மாவட்டங்களில் பருவமழை பெய்துவருகிறது. அந்த வகையில் அக்டோபர் 28-ஆம் தேதி நவம்பர் 3-ஆம் தேதி வரை 42% கூடுதலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த 2 வாரங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என்றும், தமிழ்நாட்டில் கடலோரப்பகுதி, உள்மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு […]
லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். லட்சத்தீவு, தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வட தமிழகத்தை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர், கடலூர், சேலம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் எனவும், கேரளா மற்றும் லட்சத்தீவு கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக நேற்றே தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பரவலாக பல்வேறு பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]
இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குமரிக்கடல் பகுதியில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி அடுத்த 24 மணி நேரத்தில் நகர்ந்து தென்கிழக்குஅரபிக்கடல் பகுதிக்கு செல்லும் என்றும்,இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு,திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே,தமிழகத்தில் தீபாவளி வரை கனமழை நீடிக்கும் என்று அறிவித்திருந்த நிலையில்,5 […]
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைகிறது.இதனால்,தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு(தீபாவளி வரை) கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக,இன்று கன்னியாக்குமரி,நெல்லை, தூத்துக்குடி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,மதுரை,தென்காசி, ராமநாதபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும்,குமரிக்கடல், மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்காள […]
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கன்னியாக்குமரி,நெல்லை,தூத்துக்குடி,ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், அம்மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. மேலும்,தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழையும் ,5 நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,தென்காசி,விருதுநகர்,சிவகங்கை,மதுரை,திருவாரூர்,புதுக்கோட்டை,தஞ்சை ,நாகை,சென்னை ,காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு,விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும்,இதர மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் […]