தமிழகத்தில் 5 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு..!

தமிழகத்தில் வரும் 28-ஆம் தேதி வரை மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விலகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் 28-ஆம் தேதி வரை மீண்டும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி சென்னையில் இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனம்பாக்கம் காஞ்சிபுரம் கட்டப்பாக்கத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், திருவள்ளூர், பள்ளிபட்டுவில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.