தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் : கவிஞர் வைரமுத்து

பாராமன்றத்துக்கு தேர்வான புதிய எம்.பி க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக எம்.பி-க்கள் அனைவரும், தமிழிலேயே உறுதிமொழி எடுத்துக் கொண்டு, சில எம்.பி -க்கள் தமிழ் வாழ்க என்றும், சில எம்.பி-க்கள் கலைஞர் புகழ் வாழ்க என்றும் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, கவிஞர் வைரமுத்து, தனது ட்வீட்டர் பக்கத்தில், நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்களை வாழ்த்துகிறேன் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் தமிழில்
உறுதிமொழி ஏற்ற
தங்கங்களை வாழ்த்துகிறேன்.
நாம் எந்த மொழியையும்
எதிர்க்கப் பிறந்தவர்கள் இல்லை.
சொந்த மொழியைக் காக்கப் பிறந்தவர்கள்.
பயணிப்போம் – மொழி காக்க;
தமிழையும் ஆட்சிமொழி ஆக்க.#Tamil #TamilNadu— வைரமுத்து (@Vairamuthu) June 18, 2019