சென்னை : பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 13) காலை காலமானார். உடல் நிலை குறைவு காரணமாக தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கோட்டா சீனிவாச ராவ் (1942-2025) ஒரு பிரபல இந்திய நடிகர், முக்கியமாக தெலுங்கு, தமிழ், மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர். ‘பெருமாள் பிச்சை’, ‘சனியன் சகடை’ கேரக்டரை தமிழ் […]
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் முகங்கள் முப்பரிமாண (3D) முறையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகத்தின் Face Lab இயக்குனர் பேராசிரியர் கரோலின் வில்கின்சன் தலைமையில், கீழடி அகழாய்வில் கிடைத்த மண்டை ஓடுகளைப் பயன்படுத்தி, கணினி உதவியுடன் முகத் தசைகளை மீட்டமைத்து, உடற்கூறியல் மற்றும் மானுடவியல் அளவீடுகளைப் பின்பற்றி இந்த முகங்கள் உருவாக்கப்பட்டன. கொந்தகையில் 800 மீட்டர் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட இந்த மண்டை ஓடுகளை ஆய்வு செய்து, […]
சென்னை : கீழடியில் 2,500 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் எப்படி இருந்தார்கள் தெரியுமா? கொந்தகையில் கிடைத்த 2 மண்டை ஓடுகள் மூலம் அதற்கான விடை கிடைத்துள்ளது பிரிட்டனைச் சேர்ந்த ஆய்வகம் 3டி முறையில் பழங்கால தமிழர்களின் இரு முகங்களை வடிவமைத்திருக்கிறது. 80% அறிவியல்பூர்வமாகவும், 20% கலைப்பூர்வமாகவும் அந்த முகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், “இதற்கு பின்பாவது ஒன்றிய அரசு கீழடி அறிக்கையை வெளியிடுமா என்பதே 8 கோடி தமிழர்களின் மனங்களில் எழும் ஒரே கேள்வி” என்று அமைச்சர் தங்கம் […]
மதுரை : தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து தென்கிழக்கே 12 கி.மீ தொலைவில் உள்ள கீழடியில் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் பழமையான நாகரிகங்களில் ஒன்று இருந்ததை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் கார்பன் டேட்டா உறுதிப்படுத்தியுள்ளனர். மதுரையில் இருந்து 12 கி.மீ தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கீழடியில் கிடைத்த மண்டை ஓடுகளை வைத்து, 2,500 ஆண்டுகளுக்கு முன்பு கீழடி பகுதியில் வாழ்ந்த இருவரின் முகங்களை 3D செயல்முறையில் இங்கிலாந்தின் லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் வடிவமைத்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த […]
ஆந்திரா : தமிழகத்தில் இரு மொழிக்கொள்கை என்பது பெரிய அளவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தமிழகத்தின் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் ஹிந்தி திணிப்பு வேண்டாம் என எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். இந்த சூழலில், தமிழ் திரைப்படங்களை இந்தியில் ஏன் டப்பிங் செய்ய வேண்டும்? என ஹிந்தி மொழிக்கு ஆதரவாக ஆந்திரா துணை முதல்வர் பவான் கல்யாண் பேசியது பேசுபொருளாக மாறியுள்ளது. பவன் கல்யாண், ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, “தமிழ் திரைப்படங்களை இந்தியில் டப்பிங் செய்ய வேண்டிய […]
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என கூறியதால், கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், “நான் கூறிய கருத்து தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை. நான் கூறிய கருத்துகள் அனைத்தையும் திரும்பப் பெறுகிறேன்” என மன்னிப்புக் கேட்டுள்ளார். இது தொடர்பாக, அவர் தனது மன்னிப்பு கடிதத்தில், “பாரதத் தாயின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையில் பெருமை கொண்ட உண்மையான […]
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், இப்பொது தமிழ்ல பேசுறத அவமானமா நினைக்கிறாங்க.. தயவு செஞ்சு தமிழ்ல பேசுங்க என வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ” எனக்கு ஒரு வேண்டுகோள், கெஞ்சி கேட்கிறேன், தாழ்மையுடன் கேட்கிறேன். முக்கியமாக தமிழ்நாட்டு மக்களுக்கு. தமிழ் இனி மெல்ல சாகும் அப்படின்னு பாரதியார் சொன்னாங்க. இது எவ்வளவு உண்மை என்றால் […]
திருச்சி: மாநில அரசின் கல்வி கொள்கையில் பல்வேறு பகுதிகள் மத்திய கல்வி கொள்கையில் உள்ளது போல இருக்கிறது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தேசிய கல்வி கொள்கை, தமிழக அரசின் புதிய மாநில கல்வி கொள்கை, நீட் நுழைவு தேர்வு என்று பல்வேறு விவகாரங்கள் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களையும், மாநில அரசின் மீதான தனது விமர்சனங்களையும் முன்வைத்து பேசினார். அவர் கூறுகையில், திருச்சி […]
செம்மொழி மாநாடு : மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையில் கோயம்புத்தூரில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது. Read More – நாளை மும்பை செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.! இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்த தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் […]
தமிழ்நாட்டிற்கும்,தமிழுக்கும் எதிரானது பாஜக என ஜோதிமணி எம்.பி ட்வீட். 2014 ஆம் ஆண்டு முதல் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு ரூ.74.1 கோடி நிதியும், மத்திய சமஸ்கிருத பல்கலைக்கழகத்திற்கு ரூ.1487.9 கோடியும் ஒன்றிய அரசு ஒதுக்கி உள்ளது என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார். இது குறித்து ஜோதிமணி எம்பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடந்த 8 ஆண்டுகளில் ஒன்றிய அரசு சமஸ்கிருதத்துக்கு […]
தமிழை வளர்க்க எவ்வித முயற்சியும் எடுக்காமல் ஹிந்தியை எதிர்ப்பதால் என்ன பயன்? என அண்ணாமலை கேள்வி. திமுக சார்பில் நவம்பர் 4 ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் இந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘நேற்று பாஜக சார்பில் திமுகவின் போலி ஹிந்தி எதிர்ப்பு நாடகத்தை தோலுரிக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தமிழை வளர்க்க […]
மத்திய அரசு தமிழ் மொழியை புறக்கணிப்பதாக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு […]
தமிழகத்தில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் கற்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். சென்னை ஐ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்பட்டியை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ பார்வையிட்டார். இந்த ரயில் பாட்டிகள் 160 கி.மீ வேகத்தை தாங்கக்கூடிய திறன்பெற்றவை. இந்த தொழிற்சாலையில் 102 வந்தே பாரத் ரயில்பட்டிகள் தயாரிக்கப்படுகிறது. அதன் பின் பேசிய அமைச்சர், ரயில்வே தனியார்மயமாக்கப்படாது. தொழிநுட்பங்களை பயன்படுத்தி ரயில்வேத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தமிழகத்தில் உள்ள […]
ஸ்டாலின் என்ற பெயர் எவ்வாறு அழைக்கப்பட வேண்டும் என்று தொழில்துறை அமைச்சர் மக்களுக்கு அறிவுரைக்க வேண்டும் என அண்ணாமலை ட்வீட். சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் ‘எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே’ என்றும், ‘தமிழ்த்தாய்’ எனவும் என குறிப்பிட்டு ஓவியம் ஒன்றைப் பகிர்ந்திருந்தார். இதனை விமர்சனம் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழணங்கைப் போற்றுகிறோம் என்ற போர்வையில், தமிழ் எழுத்துகளுடன் ‘ஸ’ வையும் […]
இயக்குனர் தமிழ் அவர்களின் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. காவலர் பயிற்சிப் பள்ளியில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தமிழகத்தில் உள்ள 43 காவலர் பயிற்சிப் பள்ளிகளும் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை அசோக் நகரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் இந்த படம் திரையிடப்பட்ட பொழுது இயக்குனர் தமிழும் அழைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழ், டாணாக்காரன் […]
தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் கழகம் அழைப்பு. உலகெங்கும் வாழும் தமிழர் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் தமிழர்தம் கலை, இலக்கியம் மற்றும் பண்பாட்டுக் கூறுகளை இணையவழி முன்னெடுத்துச் செல்வதிலும் தமிழில் மென்பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட கணித்தமிழ் வளர்ச்சியிலும் தமிழ் இணையக் கல்விக் கழகம் தொடர்ந்து தன் பங்களிப்பைச் செலுத்தி வருகிறது. இந்நிலையில்,தமிழ் மென்பொருள் கருவிகளை உருவாக்குவதற்கு பிரபல மென்பொருள் நிறுவனங்களுக்கு தமிழ் இணையக் கல்விக் […]
பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் பெயர் எழுதும்போது முன் எழுத்தை தமிழில் எழுத தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும்போது முன்னெழுத்தையும் தமிழிலேயே எழுத ஆணை பிறப்பித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: “2021-2022-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46-இன் போது தொழில் துறை அமைச்சர் அவர்களால் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் […]
தமிழை பயிற்று மொழியாக்க கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழைப் பயிற்று மொழியாக்க உத்தரவிடக் கோரி பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள கேந்திரீய வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் தமிழை பயிற்று மொழியாக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. தமிழை கட்டாய பாடமாக்கவும்,பயிற்று மொழியாக்கவும் கோரிய கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயிற்று மொழியாக்க இயலாது என்று மதுரை […]
தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டும் என கமலஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் அவர்கள், தமிழ் மொழிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட வேண்டியதும் தமிழ் வளர்ச்சிக்கென அதிக அளவில் நிதி ஒதுக்கி தீவிரமாகப் பணியாற்ற வேண்டியதும் நம்முடைய வரலாற்றுக் கடமை என்றும் தெரிவித்துள்ளார். இத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடுமையான முயற்சிகளுக்குப் பின் 2004-ஆம் ஆண்டு செம்மொழி எனும் அங்கீகாரத்தைப் பெற்றது தமிழ் மொழி பரிதிமாற்கலைஞர் போன்ற தமிழறிஞர்கள் […]