வெளியானது ஆடியோ…! டிடிவி தினகரன் – தங்க தமிழ்செல்வன் இடையேயான மோதல் அம்பலம்!

அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அமமுக கொள்கை பரப்பு செயலாளராக இருப்பவர் தங்க தமிழ்செல்வன். டிடிவி தினகரனுக்கு நெருக்கமான நட்பு வட்டாரத்தில் இருந்து வந்த இவர் கடந்த சில நாட்களாக விரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் டிடிவி தினகரன் உதவியாளருடன் பேசும் ஆடியோ ஆனது வெளியாகியுள்ளது.
வெளியான அந்த ஆடியோவில் ,டிடிவி தினகரனை பற்றி கடுமையாக விமர்சித்துள்ளார். டிடிவி தினகரன் கோழைத்தனமாகவும். ஆணவத்தோடும் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ள அவர் இப்படியே தொடர்ந்து செயல்பட்டால் அழிந்து போவார் என்றும் கோபத்துடன் கூறியுள்ளார். மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தன்னை தேனியில் போட்டியிட வைத்தது திட்டமிட்ட சதி என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், இருவருக்குமான மோதல் வெளியில் வந்துள்ளது. கடந்த வாரம் தேனியில் தனியாக கூட்டம் நடாத்தியதற்காக டிடிவி தினகரன் தங்க தமிழ்ச்செல்வனை குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025